நடிகர் துருவ் தன் அப்பா தன்னை அடித்த சம்பவத்தைக் கூறியுள்ளார்.
நடிகர் துருவ் - இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. மேலும், இப்படம் ரூ. 10 கோடி வரை வசூலித்துள்ளதால் வணிக ரீதியாகவும் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி புரமோஷனையும் செய்து வருவதால் இந்த வார இறுதிக்குள் நல்ல வசூலைப் பெறும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், புரமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் துருவ் தன் தந்தை விக்ரம் தன்னை அடித்த சம்பவத்தைக் கூறியுள்ளார்.
ஐ திரைப்படத்தில் இடம்பெற்ற மெர்சலாயிட்டேன் பாடலை இயக்குநர் ஷங்கர் நடிகர் விகரமிடம் பென் டிரைவ்வில் பதிவேற்றிக் கொடுத்திருக்கிறார். அதை விக்ரம் வீட்டில் வைத்திருந்தபோது அவருக்குத் தெரியாமல் துருவ் அதைத் தன் பள்ளிக்கு எடுத்துச் சென்று நண்பர்களுக்கு காட்டியிருக்கிறார். இதை அறிந்த துருவ்வின் சகோதரி விக்ரமிடம் சொல்ல, ஆத்திரமானவர் துருவ்வை அடித்துவிட்டாராம்.
இதையும் படிக்க: சரவெடி... கருப்பு முதல் பாடல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.