சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி படத்தின் படப்பிடிப்பு எப்போது?
சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்து...
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அமரன், மதராஸி திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் பீரியட் அரசியல் கதையாக எடுக்கப்பட்டு வருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முக்கியமாக, இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வருவதால் நிச்சயம் ஏமாற்றம் ஏற்படாது என பலரும் நம்புகின்றனர்.
Advertisement
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக டான் படத்தின் இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இதன் படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரத்தில் துவங்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன்!