பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் ஒவ்வொரு சீசனிலும் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் என்ற பெயரில் சில போட்டியாளர்கள் போட்டியில் பங்கேற்பது வழக்கமானது.
தற்போது பிக் பாஸ் 9 தொடங்கி மூன்று வாரங்களைக் கடந்துவிட்ட நிலையில், புதிதாக நுழைய உள்ள போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 ஆம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் வீடு மற்றும் பிக் பாஸ் சொகுசு வீடு என இரு அணிகளாகப் போட்டி நடைபெற்று வருகிறது.
முதல் வாரத்தில் மட்டும் நந்தினி தாமாக விருப்பத்தின் அடிப்படையில் வெளியேறினார். முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தி வெளியேறிய நிலையில், இரண்டாவது வாரம் அப்சரா வெளியேறினார்.
தற்போது மூன்றாவது வாரத்தில் போட்டி விறுவிறுப்படைந்துள்ளது. இந்த வாரத்தில், அரோரா, துஷார், ஆதிரை, கானா வினோத், ரம்யா ஜோ, அகோரி கலையரசன், பிரவீன், சுபிக்க்ஷா, வியனா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்றவர்கள் இந்த வாரம் போட்டியில் இருந்து வெளியேறுவார்.
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் பங்கேற்றதால், இம்முறை வைல்ட் கார்டு போட்டியாளர்கள் இல்லை எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போது பலரும் எதிர்பாராத விதமாக இரு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் நுழையவுள்ளனர்.
தொலைக்காட்சித் தொகுப்பாளராக இருந்து சின்ன திரைகளில் நடித்து கவனம் பெற்ற நடிகர் ப்ரஜின் மற்றும் அவரின் மனைவி சான்ட்ரா ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக நுழையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கணவன் - மனைவி என்ற பெருமையை இவர்கள் பெறவுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நிஜ வாழ்வில் கணவன் - மனைவியாகியுள்ளனர். தற்போது கணவன் - மனைவி இருவருமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.
இதையும் படிக்க | பிக் பாஸ் 9: ஒவ்வொரு புரோமோவிலும் பார்வதி! காரணம் என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.