பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் ஒவ்வொரு முன்னோட்டத்திலும் (புரோமோ) வி.ஜே. பார்வதி இடம்பெறும் காட்சிகளே உள்ளதாக ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் போட்டிக்காகச் சென்றவர்களில் பார்வதி மட்டுமே பார்வையாளர்களை தக்கவைப்பதற்கான விஷயங்களைச் செய்வதாகவும் மற்றவர்கள் தங்கள் சுயத்தை மறைத்துக்கொண்டு விளையாடுவதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பிக் பாஸ் 9 நிகழ்ச்சி கடந்த 5ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்று வாரங்களைக் கடந்த நிலையில், முதல் வாரத்தில் மட்டும் நந்தினி, தாமாக விருப்பத்தின் அடிப்படையில் வெளியேறினார்.
முதல் வார இறுதியில் இயக்குநர் பிரவீன் காந்தி வெளியேறிய நிலையில், இரண்டாவது வாரம் குறைந்த வாக்குகளைப் பெற்று அப்சரா வெளியேறினார்.
தற்போது, மூன்றாவது வாரத்தில் போட்டி விறுவிறுப்படைந்துள்ளது. எனினும், பிக் பாஸ் வீட்டினர் மற்றும் பிக் பாஸ் சொகுசு வீட்டினர் என இரு வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கும் வேண்டாத நபராக பார்வதி மாறியுள்ளார்.
ஆரம்பத்தில் பலரின் வெறுப்புகளை பெற்ற நபராக பார்வதி இருந்த நிலையில், தற்போது அவர் ஒருவர் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் மக்களை ஈர்க்கும் போட்டியாளராக மாறியுள்ளார்.
ஒவ்வொரு சூழலிலும் வித்தியாசமாக செயல்பட்டு பிரச்னைகளை உருவாக்கி அதில் பலரின் கவனத்தைத் திருப்பி, ஒரு தீர்வை எட்டுகிறார். இது மக்களை தக்கவைப்பதோடு, தொடர்ந்து அவர் பிக் பாஸ் வீட்டில் நீடிக்க வேண்டும் என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது.
தற்போது வெளியாகிவரும் பிக் பாஸ் முன்னோட்ட விடியோக்களில் கூட அதிக எண்ணிக்கையில் வி.ஜே. பார்வதி இடம்பெறும் காட்சிகளே உள்ளன. இதனால் ரசிகர்கள் பலர் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிக்க | பிக் பாஸில் வெடித்த வன்முறை! மேஜையைத் தூக்கி வீசிய கலை! பார்வதி, திவாகர் மோதல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.