பிக் பாஸ் Photo : Vijay TV
செய்திகள்

பிக் பாஸ்: இந்த வாரம் சிறைக்கு அனுப்பப்பட்ட இருவர் யார்?

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் சிறைக்கு அனுப்பப்பட்ட இருவர்...

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸில் இந்த வாரம் பார்வதி மற்றும் கம்ருதின் ஆகியோரை சக போட்டியாளர்கள் சிறைக்கு அனுப்பியுள்ளனர்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. இதுவரை நந்தினி, பிரவீன் காந்தி மற்றும் அப்சரா ஆகியோர் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். 17 பேர் விளையாடி வருகின்றனர்.

இந்த வாரம் ’பிக் பாஸ் ஜூஸ் ஃபேக்டரி’ என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் பிரவீன் மற்றும் சுபிக்‌ஷா வெற்றி பெற்றனர்.

இந்த டாஸ்க்கில் தர சரிபார்ப்பாளர்களாக திவாகரும், பார்வதியும் செயல்பட்டனர். அப்போது வழக்கம்போல் பார்வதியும் சக போட்டியாளர்களும் முட்டிக்கொண்டனர்.

இதன் எதிரொலியாக இந்த வாரம் மோசமாக விளையாடிய போட்டியாளர்கள் பட்டியலுக்கு பெரும்பாலான போட்டியாளர்கள் பார்வதியின் பெயரை பரிந்துரைத்தனர். மற்றொரு போட்டியாளர்களாக கம்ருதினை தேர்வு செய்தனர்.

கம்ருதின் மற்றும் துஷாருக்கு இடையே இந்த வாரம் மோதல் ஏற்பட்டது. அப்போது துஷார் மேல் கை வைத்து தள்ளியது, வெளியே வந்தால் தலையைத் திருப்பிவிடுவேன் என்று மிரட்டல் விடுத்தது உள்ளிட்டவை கம்ருதினுக்கு எதிராக திரும்பியது.

இவர்கள் இருவரையும் சிறையில் அடைக்க பிக் பாஸ் உத்தரவிட்ட போது, கலையரசன் மற்றும் அரோரா மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் தொடங்கியதில் இருந்து பார்வதியின் நண்பர்கள் வட்டாரத்தில் கலையரசன் இருந்தார். ஆனால், தற்போது பார்வதிக்கு எதிராக அவர் திரும்பியுள்ளார்.

இதேபோல், கம்ருதினுடன் கடந்த வாரம் முழுவதும் நட்பாக பேசிவந்த அரோரா, தற்போது அவருக்கு எதிராகியுள்ளார்.

Bigg Boss: Two people sent to jail this week

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாமரையாள் ஏன் சிரித்தாள்... ருக்மணி வசந்த்!

ஆயிரத்தில் ஒருவன் - 2, புதுப்பேட்டை - 2 எப்போது? செல்வராகவன் அப்டேட்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.87.78 ஆக நிறைவு!

பைசனை பாராட்டிய வைகோ!

ஸ்மிருதி மந்தனா - பிரதீகா ராவல் பார்ட்னர்ஷிப்பின் ரகசியம் இதுதான்!

SCROLL FOR NEXT