செய்திகள்

பைசன் திரைப்படத்தை பார்த்து பாராட்டிய அரசியல் தலைவர்கள்

பைசன் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்துவிட்டு அரசியல் தலைவர்கள் பலர் இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டியுள்ளனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

பைசன் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்துவிட்டு அரசியல் தலைவர்கள் பலர் இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டியுள்ளனர்.

நடிகர் துருவ் - இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் தீபாவளி வெளியீடாகத் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. படம் மணத்தி கணேசன் என்கிற கபடி வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது.

இட்லி கடை ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

இதில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். மேலும் ரெஜிஷா விஜயன், லால், அமீர், பசுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பாக பா. ரஞ்சித் தயாரித்தார். இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் உள்பட பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் பைசன் படத்தின் சிறப்புக் காட்சி சென்னையில் நேற்று இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தவாக தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோர் படத்தை பார்த்து அதன் இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டினர்.

Many political leaders have praised director Mari Selvaraj after watching the special screening of the film Bison.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல் ஆட்சியரகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

ரஞ்சி கோப்பை: நிஷால் - இம்லிவதி சதத்தால் மீண்டது நாகாலாந்து!

கரூா் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினா் விஜய்யை சந்திக்கச் செல்லவில்லை!

வடகிழக்குப் மழை பாதிப்பு: சென்னையில் 106 சமையல் கூடங்கள் மூலம் உணவு வழங்கல்! தமிழக அரசு தகவல்

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் நெல் ஈரப்பதம் 18 முதல் 22 வரை உள்ளது: மத்தியக் குழு ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT