டியூட் படத்தின் போஸ்டர்.  படம்: எக்ஸ் / மைத்ரி மூவி மேக்கர்ஸ்.
செய்திகள்

ஓடிடியில் டியூட் எப்போது?

டியூட் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவான டியூட் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வணிக ரீதியாகவும் அசத்தியிருக்கிறது.

நடிகர் பிரதீப் ரங்கநாதனும் ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்து முன்னணி நடிகர்களின் வரிசையில் இணைந்துள்ளார்.

மலையாள நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் நடிகர் சரத் குமார், பிரதீப்பின் மாமாவாக நடித்துள்ளார். இவரின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், டியூட் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற நவ. 14 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழுப்பு என்பது நிறமல்ல... நிவிஷா!

குட்டி செல்லத்தின் சேட்டைகள்! Keerthy Suresh இன்ஸ்டா பதிவு!

முதல் டி20: வங்கதேசத்துக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

விஜய்யின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் - நயினார் நாகேந்திரன்

தீபாவளி லுக்... நியா சர்மா!

SCROLL FOR NEXT