பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு மூலம் திருநங்கை நடிகை ஜீவா போட்டியாளராகப் பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி, 4 வாரங்களாகியுள்ள நிலையில், இந்த வாரத்தின் இறுதியில் வைல்டு கார்டு மூலம் சிலர், போட்டியாளர்களாக வீட்டிற்குள் அனுப்பப்படவுள்ளனர்.
இவர்கள் ஒரு மாதம் போட்டியை வெளியில் இருந்து பார்த்துவிட்டுச் செல்வதால், போட்டியாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதை விட, பல புதிய திருப்பங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 ஆம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 20 ஆண்கள், 20 பெண்கள் இப்போட்டியில் பங்கேற்றிருந்த நிலையில், முதல் வாரம் தாமாகவே முன்வந்து நந்தினி வெளியேறினார். முதல் வார இறுதியில் இயக்குநர் பிரவீன் காந்தியும், இரண்டாவது வார இறுதியில் திருநங்கை அப்சராவும், மூன்றாவது வார இறுதியில் ஆதிரையும் குறைந்த வாக்குகளைப் பெற்றதால் வெளியேறினர்.
தற்போது 4 வாரங்களைக் கடந்து பிக் பாஸ் ஒளிபரப்பாகி வருகிறது. கிட்டத்தட்ட ஒரு மாதமாகிவிட்ட நிலையில், வைல்ட் கார்டு மூலம் சில போட்டியாளர்கள் அனுப்பப்படவுள்ளனர். அந்தவகையில் தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த திருநங்கை ஜீவா, பிக் பாஸ் போட்டியாளராகப் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேபோன்று சின்ன திரை தம்பதிகளான ப்ரஜின் மற்றும் அவரின் மனைவி சான்ட்ரா ஆகியோர் போட்டியாளர்களாக செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | அய்யனார் துணை தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் தீபக்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.