பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் கம்ருதின் எல்லை மீறிச் செயல்படுவதாக பார்வதி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. இதுவரை நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா மற்றும் ஆதிரை ஆகியோர் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளனர்.
தற்போது பிக் பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் உள்ள நிலையில், அடுத்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று போட்டியாளர்களின் உடமைகள், காலணிகள், அழகு சாதனப் பொருள்கள் என அனைத்தையும் பறித்த பிக் பாஸ், அனைவருக்கும் சீருடை வழங்கியுள்ளார்.
இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் கேப்டனாக பதவியேற்றுள்ள பிரவீன், பிக் பாஸ் வீட்டை ராணுவக் கட்டுப்பாட்டுடன் நடத்தப் போவதாக அறிவித்ததற்கு பார்வதி எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
இரண்டாவது ப்ரோமோவில், திவாகருடன் தனியாக அமர்ந்து உரையாடும் பார்வதி, “கம்ருதின் தேவையில்லாமல் தொடுகிறார் என்பதை நான் உணர்கிறேன். நான் டேட் செய்தால் உறுதியோடு செய்வேன். அவருடைய ஊறுகாய்காக எல்லாம் என்னை பயன்படுத்த முடியாது. எல்லை மீறிதான் சில விஷயங்களை செய்து வருகிறார்.” எனத் தெரிவிக்கிறார்.
இதற்கு பதிலளிக்கும் திவாகர், “ரொம்ப கவனமாக இருக்க வேண்டும், வேற மாதிரி போய்விடும். எந்த வகையிலும் அவர் பாதுகாப்பானவர் கிடையாது” எனத் தெரிவித்தார்.
பிக் பாஸ் தொடங்கியது முதல் திவாகர் மற்றும் கலையரசனுடன் நெருங்கிய நட்புடன் பார்வதி பழகி வந்த நிலையில், கடந்த வாரம் டாஸ்க்கின் போது இருவருடனும் வார்த்தை மோதல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கம்ருதினும் பார்வதியும் கடந்த ஒரு வாரமாக பிக் பாஸ் வீட்டுக்குள் ஒன்றாக சுற்றிவந்த நிலையில், இன்றைய ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.