திருமாங்கல்யம் தொடரின் ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள இந்தத் தொடரில் மேகா சல்மான், பிரித்விராஜ், காயத்ரி ஸ்ரீ ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்தத் தொடரில், கதையின் நாயகியை (மேகா), நாயகன் (பிரித்விராஜ்) விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொள்கிறார். ஆனால், நாயகன் முன்பே காயத்ரி ஸ்ரீ உடன் திருமண நிச்சயதார்தத்தை முடித்திருப்பார்.
இவர்கள் மூவருக்கு இடையிலான முக்கோண காதல் கதையே திருமாங்கல்யம் தொடரின் கதையாகும். நாயகன் முன்பே ஒரு பெண்ணை நிச்சயித்த நிலையில், நாயகி எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி இந்தத் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
நடிகை மேகா சல்மான் கேரளத்தில் சில தொடர்களில் நடித்து பிரபலமானவர். நடிகர் பிரித்விராஜ் தெலுங்கில் தொடர்களில் நடித்துள்ளார்.
மேலும் இந்தத் தொடரில் மது மோகன், சசி லயா, ஆடிட்டர் ஸ்ரீதர், டேவிட் மணோ, லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
திருமாங்கல்யம் தொடர் நவ. 3 ஆம் தேதி முதல் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப உறவுகள் மையப்படுத்தி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாரி ஜாதம், கெட்டி கேளம் தொடர்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், அதே பாணியில் திருமாங்கல்யம் தொடரும் எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தலைகீழமாக மாறப்போகும் ஆட்டம்! பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் வைல்ட் கார்டு போட்டியாளர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.