தி ஃபேமிலி மேன் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 செப்டம்பரில் வெளியான தி ஃபேமிலி மேன் இணையத் தொடர் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றது. மனோஜ் பாஜ்பாய், பிரியா மணி நடித்த இத்தொடரை ராஜ் & டி.கே. இயக்கியிருந்தார்கள்.
முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பால் தி ஃபேமிலி மேன் இணையத் தொடரின் 2-வது பாகம் உருவானது. இதுவும் ரசிகர்களிடம் பெரிதாகக் கவனம் பெற்றது. ஆனால், இலங்கைத் தமிழராக நடிகை சமந்தா நடித்ததற்காக சில சர்ச்சைகள் எழுந்தன.
இதனிடையே, தி ஃபேமிலி மேன் சீசன் - 3 தொடருக்கான படப்பிடிப்பு கடந்தாண்டு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் தொடரில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த சீசனை ராஜ் மற்றும் டிகே உடன் சுமன்குமார் மற்றும் துஷாரும் இயக்கியுள்ளனர்.
இந்த நிலையில், தி ஃபேமிலி மேன் இணையத் தொடர் வரும் நவ. 21 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பர் ஹிட் படங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.