காந்தாரா சாப்டர் - 1 திரைப்படம் நாளை (அக். 31) ஓடிடியில் வெளியாகவுள்ளது.
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த காந்தாரா - 1 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமான வசூலைச் செய்து வருகிறது. ரூ. 150 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இதுவரை ரூ. 800 கோடிக்கும் அதிகமாகவே வணிகம் செய்திருக்கிறது.
இதனால், ரிஷப் ஷெட்டியும் இந்தியளவில் பிரபலமடைந்துள்ளார். மேலும், இப்படம் நிறைய விருதுகளை வெல்லும் என்றும் தெரிகிறது.
இப்படம் நாளை (அக். 31) அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
இதற்கிடையே, திரையரங்கில் வெற்றிகரமான ஓடிக்கொண்டிருக்கும் காந்தாரா - 1 ஏன் ஒரே மாதத்திலேயே திரைக்கு வருகிறது என்கிற கேள்விகளும் எழுந்தன.
இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே ஃபிலிம்ஸின் பங்குதாரர் சௌலே கவுடா, “காந்தாரா - 1 திரைப்படத்தின் ஓடிடி உரிமம் 3 ஆண்டுகளுக்கு முன்பே விற்கப்பட்டது. அதனால், இப்போதைய வெளியீடு முடிவு அன்றைய நடைமுறைக்கு மாறுபட்டதாகவே இருந்தாலும் சொன்னபடி நடந்துகொள்வது எங்கள் கடமையாகும்.
கரோனாவுக்கு முன் அனைத்து திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியான 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியாகும். ஆனால், கரோனாவுக்குப் பின் 4 வாரங்களாக மாறின. கூலி போன்ற பெரிய பட்ஜெட் படமும் 4 வாரங்களில் அனைத்து மொழிகளிலும் வெளியானது. அந்தந்த நேரத்தைப் பொறுத்து இது நிகழ்கிறது.
காந்தாரா சாப்டர் - 1 தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில்தான் வெளியாகிறது. 8 வாரங்கள் கழித்தே ஹிந்தியில் வெளியாகும். மேலும், ஓடிடி வெளியீடு திரையரங்க வணிகத்தைப் பாதிக்காது என்றே நினைக்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: திட்டமிட்டபடி திரைக்கு வரும் டாக்ஸிக்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.