ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மாரி தொடர் விரைவில் நிறைவடைகிறது.
மாரி தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் நாயகியாக நடித்துவந்த நடிகை ஆஷிகா விலகுவதாக அறிவித்த நிலையில், அவருக்கு பதிலாக அஞ்சனா ஸ்ரீநிவாஸன் நடிக்கிறார்.
நாயகனாக நடித்து வந்த ஆதர்ஷும் இந்தத் தொடரில் இருந்து விலகியதால், அவருக்கு பதில் பாரதி கண்ணம்மா தொடர் பிரபலம் சுகேஷ் நாயகனாக நடிக்கிறார்.
மாரி தொடர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. மூடநம்பிக்கைகளை மையப்படுத்தி அமானுஷ்ய காட்சிகள் கொண்ட திரைக்கதையுடன் மாரி தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
மாரி தொடரின் முதல் பாகம் ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாரி - 2 தொடரின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடையவுள்ளதாகவும், கிளைமேக்ஸ் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பப்படவுள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
மாரி தொடர் மக்களின் விருப்பத் தொடராகவும் இருந்து வருவதால், இந்தத் தொடரைப் பார்க்கும் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: காந்தா படத்தின் புதிய பாடல் வெளியீடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.