செய்திகள்

ஆல்யா மானசாவின் பாரிஜாதம் தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

பாரிஜாதம் தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

ஆல்யா மானசா நடிக்கும் புதிய தொடரான பாரிஜாதம் தொடரின் ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜா ராணி தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. முன்னதாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இனியா தொடரில் நடித்த ஆல்யா மானசா, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் நடிக்கிறார்.

இந்தப் புதிய தொடருக்கு பாரிஜாதம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. பாரிஜாதம் தொடரில், ஆல்யா மானசாக்கு ஜோடியாக ரக்‌ஷித் நடிக்கிறார். மேலும் இத்தொடரில் ஸ்வாதி, ராஜ்காந்த், லதா ராவ் உள்ளிட்டோர் நடிக்கிறார்.

தாயை இழந்த நாயகி ஆல்யா மானசா, பாடகரைத் திருமணம் செய்துகொண்டு புகுந்த வீட்டில் அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.

இவர், பாரிஜாதம் தொடரில் காதுகேட்கும் தன்மையை இழந்தவராக நடிக்கிறார். மாறுபட்ட கதையில் மானசா நடிப்பதால், இந்தத் தொடர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், பாரிஜாதம் தொடர் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

The airing date and time of Parijatham, the new series starring Alya Manasa, has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: எடப்பாடி பழனிசாமி

நாய்கள் கடித்து ஆடுகள், கோழிகள் உயிரிழப்பு: இழப்பீடு வழங்கக் கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு: மதுரை மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க உத்தரவு

மறியலில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் 120 போ் கைது

பேருந்து பயணிகளிடம் தகராறு: தட்டிக் கேட்ட காவலா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT