செய்திகள்

லைக் மழை! 10 கோடி பார்வைகளைக் கடந்த சின்மயி மேடைப் பாடல்!

சின்மயின் முத்த மழை பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது...

இணையதளச் செய்திப் பிரிவு

தக் லைஃப் இசைவெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடல் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜுன். 5 ஆம் தேதி வெளியானது.

படத்தின் கதை மற்றும் சிம்பு, த்ரிஷாவின் கதாபாத்திரங்கள் அளித்த ஏமாற்றம் என பல விஷயங்கள் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதால் விமர்சன ரீதியாக படம் தோல்வியடைந்தது.

இப்படத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் சிவா ஆனந்த் எழுதிய முத்த மழை பாடல் சின்மயி குரலால் பெரும் கவனம் பெற்றது. ஆனால், படத்தில் விடியோ வடிவில் பாடல் பயன்படுத்தப்படவில்லை. இது ரசிகர்களிடம் பெரிய ஏமாற்றத்தை அளித்தது. தொடர்ந்து, சில நாள்களுக்கு முன் பாடகி தீ பாடிய பாடலின் விடியோவையும் வெளியிட்டனர்.

தீ குரலும் த்ரிஷாவின் நடிப்பும் சரியாகப் பொருந்தாததால் அப்பாடலும் கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்தது.

ஆனால், இசைவெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி பாடிய முத்த மழைப் பாடலை இன்றும் ரசிகர்கள் கேட்டபடியே இருக்கின்றனர். மிகப்பெரியளவில் டிரெண்டிங் ஆன இப்பாடல் இதுவரை யூடியூபில் 10 கோடி (100 மில்லியன்) பார்வைகளைக் கடந்துள்ளது. இசையும் வரியும் ஒரு காரணம் என்றாலும் சின்மயின் குரலே பாடலுக்குப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்ததாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காமெண்ட்களில் சின்மயியைப் பாராட்டியே பலரும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கண்ணப்பா ஓடிடி தேதி!

chinmayi sripada's muththa mazhai stage perfomance crossed 100 million views in youtube

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கயத்தாறில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை அருங்காட்சியகம் நவீனத் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும்

2026 இல் கூட்டணி ஆட்சி அமையும்: கிருஷ்ணசாமி

செப். 7-இல் சந்திர கிரகணம்: மலைக்கோட்டை கோயிலில் முன்னதாகவே நடை அடைப்பு

காஞ்சிபுரம் - செய்யாறு பாலாற்றில் ரூ.60 கோடியில் உயா்மட்ட மேம்பாலம்

SCROLL FOR NEXT