நக்‌ஷத்ரா /  
செய்திகள்

பிக் பாஸ் 9 போட்டியாளராகும் சின்ன திரை நடிகை?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் சின்ன திரை நடிகை நக்‌ஷத்ரா பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் சின்ன திரை நடிகை நக்‌ஷத்ரா பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோன்று நடனக் கலைஞரும் சமையல் நிகழ்ச்சியின் பங்கேற்பாளருமான ஜன்மோனி டோலியும் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. வெளி உலகத் தொடர்பின்றி 100 நாள்கள் பிரபலங்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் நிகழ்ச்சியே பிக் பாஸ். இடையிடையே போட்டியாளர்களின் மனநிலைக்கு ஏற்ப போட்டிகளும் நடத்தப்படும்.

இதில், மக்கள் மனங்களைக் கவர்ந்த போட்டியாளர் அதிக வாக்குகள் பெற்று போட்டியில் நீடிப்பார். குறைந்த வாக்குகளைப் பெற்றவர்கள் ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்படுவார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 9வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். ஆனால், 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இம்முறை பிக் பாஸ் 9வது சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சி அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், போட்டியாளர்களாக பங்கேற்கவுள்ளோர் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

நக்‌ஷத்ரா

அந்தவகையில், சின்ன திரை நடிகை நக்‌ஷத்ரா போட்டியாளராக பங்கேற்கவுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் நக்‌ஷத்ரா. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்துள்ள இவர், பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தால், உணர்வுப்பூர்வமான நிகழ்வுகளுக்கு பஞ்சமிருக்காது என்பதே ரசிகர்கள் கருத்தாக உள்ளது.

ஜன்மோனி டோலி

இதேபோன்று, குக் வித் கோமாளி -6 நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றுள்ள ஜன்மோனி டோலியும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் செல்லவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. அஸ்ஸாமை சேர்ந்த இவர், தமிழ்நாட்டில் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

தொழில்முறை நடனக் கலைஞரான இவர், பிக் பாஸ் வீட்டிற்குச் செல்வது உறுதியானால், வேறு ஒரு பரிமாணத்தை இவரிம் எதிர்பார்க்கலாம் என கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

எனினும், தொலைக்காட்சி தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | ஆல்யா மானசாவின் பாரிஜாதம் தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

Nakshathra Nagesh and Janmoni Dolly to enter Bigg boss 9

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெங்களூருவில் தொழிலதிபர் சி.ஜே.ராய் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

வேதாரண்யம் : தந்தை அடித்துக் கொலை; மகன் கைது

இளையராஜாவிடம் விருது பெற்ற பாக்யஸ்ரீ போர்ஸ்!

பட்ஜெட்: சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது!

திமுக அரசு ஒரேயொரு குடும்பத்துக்கானது மட்டுமே: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT