உமர் லத்தீப்  இன்ஸ்டாகிராம்
செய்திகள்

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பிரபலம்!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ள உமர் லத்தீப் பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் குக் வித் கோமாளியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ள உமர் லத்தீப் பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. வெளி உலகத் தொடர்பின்றி 100 நாள்கள் பிரபலங்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் நிகழ்ச்சியே பிக் பாஸ். இடையிடையே போட்டியாளர்களின் மனநிலைக்கு ஏற்ப போட்டிகளும் நடத்தப்படும்.

இதில், மக்கள் மனங்களைக் கவர்ந்த போட்டியாளர் அதிக வாக்குகள் பெற்று போட்டியில் நீடிப்பார். குறைந்த வாக்குகளைப் பெற்றவர்கள் ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்படுவார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 9வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். ஆனால், 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இம்முறை பிக் பாஸ் 9வது சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சி அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், போட்டியாளர்களாக பங்கேற்கவுள்ளோர் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்...

அந்தவகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமையல் கலைஞராகப் பங்கேற்ற உமர் லத்தீப் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் படத்தில் உமர் நடித்து கவனம் பெற்றார். இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ் சின்ன திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

தற்போது உமர் பிக் பாஸ் செல்வது உறுதியானால், அங்கு புதிய கோணத்தில் அவரை ரசிகர்கள் பார்க்கும் வாய்ப்பு உருவாகும். பெண்களுக்கு மிகவும் பிடித்த நடிகராக உள்ள அமர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் சென்றால் பல திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ரசிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இது தொடர்பாக பிக் பாஸ் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

இதையும் படிக்க | பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் ஹார்ட் பீட் தொடர் நடிகை!

Umair Lateef expected in Bigg boss 9 vijay tv

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூலோக சொர்க்கத்தில்... ஸாரா!

மொட்டை அடித்தது ஏன்? இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்!

இஸ்ரேல் தாக்குதல்: கத்தார் விரைந்தார் அமீரக அதிபர்!

நேபாளத்தில் 13,000க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்!

இந்தியாவில் 10 லட்சம் மின்சார வாகனங்கள் அமோக விற்பனை!

SCROLL FOR NEXT