முகப்பு
செய்திகள்

எஸ்டிஆர் படத்துக்கு இசையமைக்கும் ஜிவி!

சிம்பு படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ்....

Updated On : 13 செப்டம்பர், 2025 at 5:54 PM
ஜிவி பிரகாஷ், சிலம்பரசன்
பகிர்:

நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை திரைப்படத்தின் காலகட்டத்தைத் தொட்டு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களமாக உருவாகி வருகிறது.

இதில் நாயகனாக நடிகர் சிலம்பரசனும் முக்கிய கதாபாத்திரங்களில் வடசென்னை திரைப்படத்தில் நடித்தவர்களும் நடிக்கின்றனர்.

Advertisement

அண்மையில், இப்படத்தின் புரோமோ பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியானது. சிம்பு நடந்து வருவது போன்ற காட்சி இப்படம் வடசென்னை திரைப்படத்தை மையப்படுத்தி உருவாகி வருவதை உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இறுதியாக, சிம்பு நடித்த காளை திரைப்படத்திற்கு ஜிவி இசையமைத்திருந்தார். தற்போது, 17 ஆண்டுகள் கழித்து இக்கூட்டணி இணைகிறது.

summary

gv prakash singup with silambarasan and vetri maaran new movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.