நடிகை மீனா 
செய்திகள்

இரண்டாவது திருமணமா? மீனா பதில்!

நடிகை மீனா இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார்...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை மீனா இரண்டாவது திருமண வதந்தி குறித்து பேசியுள்ளார்.

தென்னிந்தியளவில் பிரபல நடிகையாக இருப்பவர் மீனா. அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், வீரா படத்தில் ரஜினிக்கே ஜோடியாக நடித்து அசத்தினார். தொடர்ந்து, எஜமான் மற்றும் முத்து படங்களில் நாயகியாக நடித்து முன்னணி நாயகினார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என இதுவரை 120 திரைப்படங்களுக்கும் மேல் நடித்தவருக்கு தமிழிலும் மலையாளத்தில் இப்போதும் வரவேற்பு இருக்கிறது.

இவருக்கும் வித்யா சாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணமானது. இந்த இணைக்கு நைனிகா என்கிற மகள் பிறந்தார் (தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்தவர்).

கரோனா காலத்தின்போது மீனாவின் கணவர் வித்யா சாகர் நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்தார். மீனாவின் கணவர் என்பதால் திரையுலகினர் பலரும் அஞ்சலியில் கலந்துகொண்டனர். தொடர்ந்து, வித்யா சாகர் இறந்த சில மாதங்களிலேயே மீனா இரண்டாவது திருமணம் செய்ததாக வதந்திகள் பரவின.

மீனா

இந்த நிலையில், நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய மீனா, “என் கணவர் இறந்ததும் நான் இன்னொரு திருமணம் செய்துகொண்டதாக வதந்திகள் பரவின. இதனால், நானும் என் குடும்பமும் கடுமையான மனவேதனைக்கு ஆளானோம். இரண்டாவது திருமணம் செய்ய விருப்பமில்லை. இப்போது, என் கவனமெல்லாம் என் மகள் நைனிகா மீதுதான்.” எனத் தெரிவித்துள்ளார்.

actor meena spokes about her second marriage rumours

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாகிறதாம்: முஸ்லிம் நாடுகள் ஒருமித்த முடிவு!

மயிலாடுதுறை இளைஞர் ஆணவக்கொலை: காதலி பரப்பரப்புப் பேட்டி!

பிரதமர் மோடியின் பிறந்தநாள் ஒரு கருப்பு நாள்: காங்கிரஸ் எம்பி விமர்சனம்!

எதிர்நீச்சலை பின்னுக்குத்தள்ளிய சிறகடிக்க ஆசை! டிஆர்பி பட்டியல் வெளியீடு!

ஓடிடியில் மதராஸி எப்போது?

SCROLL FOR NEXT