சிம்புவைத்தான் திருமணம் செய்வேன்... நடிகைக்கு டிஆர் பதில்!
நடிகர் சிம்பு திருமணம் குறித்து டி.ஆர்...
நடிகையொருவர் சிலம்பரசனைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிலம்பரசனுக்கு தக் லைஃப் திரைப்படம் தோல்வியைக் கொடுத்தாலும் இவர் நடிக்கவுள்ள அடுத்தடுத்த படங்களின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
அதேநேரம், 42 வயதாகும் சிம்புவுக்கு எப்போது கல்யாணம் என அவரது ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட டி. ராஜேந்திரனிடம் நடிகை சாந்தினி, ‘நான் திருமணம் செய்தால் சிலம்பரசனைத்தான் செய்வேன்’ எனக் கூறினார்.
இதைக்கேட்டு எமோஷனலான டி. ஆர்., “நானும் மனுஷன்தான்மா. எனக்கும் இதயம் இருக்கிறது. நீங்கள் கேட்ட கேள்வியைத் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் மனது வலிக்கிறது. மனைவியை நேசிப்பது மட்டும் காதல் அல்ல; பிள்ளைகளை நேசிப்பதும் காதல்தான். என் மகனை உயிருக்கு உயிராக நேசிக்கும் பெண் கிடைக்க வேண்டும்.
அவனிடம் சென்று நாங்கள் திருமணம் செய்துகொள் எனச் சொன்னால் உடனே கேட்பான். ஆனால், என் மகன் கேட்பான் என்பதற்காக நாங்கள் வற்புறுத்த மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஒரு ஏழைத்தாயின் மகன்... விமர்சனத்திற்கு ஆளாகும் ஜிவி பிரகாஷ்!
actor t.rajendran spokes about his son silambarasan marriage
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.