லோகா படத்தில் கல்யாணி பிரியதர்ஷன்... படம்: எக்ஸ் / துல்கர் சல்மான்.
செய்திகள்

ஓடிடியில் லோகா எப்போது? துல்கர் சல்மான் அப்டேட்!

லோகா படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக....

இணையதளச் செய்திப் பிரிவு

லோகா படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக, முக்கிய அறிவிப்பை நடிகர் துல்கான் சல்மான் வெளியிட்டுள்ளார்.

மலையாளத்தில் ஓணம் திருவிழாவையொட்டி திரைக்கு வந்த 'லோகா சேப்டர் - 1 சந்திரா' திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ், ஹந்தி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

கல்யாணி பிரியதர்ஷனை மையக் கதாபாத்திரமாக வைத்து உருவான இப்படம் மேலும், லோகா கதைக்களத்துடன் தொடர்புடைய 4 பாகங்கள் உருவாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துல்கர் சல்மான் தயாரிப்பில் டோமினிக் அருண் இயக்கத்தில் வெளியான இந்தப் படம், உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தயாரிப்பாளரும் நடிகருமான துல்கர் சல்மான், 'லோகா சேப்டர் - 1 சந்திரா' திரைப்படம் விரைவில் ஓடிடிக்கு வரும், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் காத்திருங்கள்” என்று சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

'லோகா சேப்டர் - 1 சந்திரா' படத்தின் உரிமத்தை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Actor Dulquer Salmaan has made an important announcement regarding the OTT release of the film Loka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழை!

திரிஷ்யம் - 3 படப்பிடிப்பு துவக்கம்!

அண்ணாமலை - டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு! திருப்பத்தை ஏற்படுத்துமா?

எச்1பி சர்ச்சைக்கு இடையே சீனாவின் கே விசா அறிமுகம்! இளைஞர்களை ஈர்க்கும் சிறப்பம்சங்கள்!

ஒரு நாயகன், இரு மனைவி... திருமாங்கல்யம் தொடரின் புதிய முன்னோட்ட விடியோ!

SCROLL FOR NEXT