சைந்தவி, ஜி.வி. பிரகாஷ் 
செய்திகள்

ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வழக்கு! செப். 30 தீர்ப்பு!

ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வழக்கின் தீர்ப்பு தேதி...

இணையதளச் செய்திப் பிரிவு

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி விவாகரத்து வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் கடந்த 2013-ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், பின்னணிப் பாடகியுமான சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டாா். இவர்களுக்கு தம்பதிக்கு ஒரு மகள் உள்ளாா்.

கடந்த 12 ஆண்டு திருமண உறவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, இருவருக்கிடையே இருந்த பிரச்னை காரணமாக அண்மைக் காலமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனா்.

பின்னா், இருவரும் பிரிவதாக அறிவித்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி, கடந்த ஆண்டு ஏப். 24-ஆம் தேதி நேரில் ஆஜராகி மனு தாக்கல் செய்திருந்தனா்.

சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, இருவரையும் இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, இருவரும் நேரில் ஆஜராகி, தங்களின் நிலைபாட்டை தெரிவித்தனர்.

மேலும், குழந்தையை சைந்தவி கவனித்துக் கொள்வதில் தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று ஜி.வி. பிரகாஷ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த நிலையில், வருகின்ற செப்டம்பர் 30 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

இருவரும் தங்களின் விவாகரத்து நிலைபாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருக்கும் நிலையில், விவாகரத்து வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

G.V. Prakash - Saindhavi divorce case verdict on Sept. 30

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.10,499-க்கு ரியல்மி பி3 லைட் 5-ஜி: சிறப்பம்சங்கள் என்ன?

எச்-1பி விசா: ஆந்திரத்தில் புதிய வளாகம் திறக்கும் அஸென்ஜர்! 12,000 பேருக்கு வேலை

அனுஷ்காவின் காதி: ஓடிடியில் எப்போது?

“தமிழ்நாட்டு நிதியில் உ.பி. வாழ்கிறது!” அன்புமணிக்கு பதிலளித்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா!

ஆளுநர் என்பவர் முதலாளி அல்ல! கேரளத்தில் ஆளுநரை வம்பிழுக்கும் மாநில அரசு?

SCROLL FOR NEXT