கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் நேற்று (செப். 27) இரவு கரூரில் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட மிக மோசமான நெரிசலில் 40 பேர் பலியானது மாநிலத்தையே உலுக்கியுள்ளது.
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சமும் த.வெ.க. சார்பில் விஜய் ரூ. 20 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
அதேநேரம், இந்த கோர சம்பவத்துக்கு இந்தியளவிலுள்ள அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் இரங்கல்களைக் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர்கள் மம்மூட்டியும் மோகன்லாலும், “கரூரில் நடந்த சம்பவம் துன்பமளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடுபவர்களுக்கு இரங்கல்களைத் தெரிவிக்கிறோம்.” எனப் பதிவிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: விஜய்யைக் கைது செய்ய வேண்டும்: ஓவியா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.