நடிகர் அஜித் குமார் அணி ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் 3 ஆம் பிடித்துள்ளது.
குட் பேட் அக்லி திரைப்படத்தை முடித்துவிட்டு நடிகர் அஜித் குமார் கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது அஜித் குமார் ரேஸிங் அணி சில மாதங்களுக்கு முன் துபையில் நடந்த கார் பந்தயத்தில் முதல்முறையாகக் கலந்துகொண்டு 3 ஆம் இடம் பிடித்து அசத்தியது.
தொடர்ந்து, பெல்ஜியம், நெதர்லாந்தில் நடைபெற்ற கார் பந்தயங்களில் போட்டியிட்டு கவனிக்கத்தக்க இடத்தைப் பெற்றனர்.
இந்த நிலையில், நேற்று ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற 24H சீரியஸில் கன்ஸ்ட்ரக்டர் சாம்பியன்ஸ் (constructor champions) பிரிவில் கலந்துகொண்ட அஜித் குமார் அணியினர் 3 ஆம் இடம் பிடித்து அசத்தினர்.
விருது நிகழ்வின்போது அஜித்தின் குடும்பத்தினரும் கலந்துகொண்டு அவரை உற்சாகப்படுத்தினர்.
இதையும் படிக்க: ஆசியத் தொடர் சம்பளம் ராணுவத்துக்கு நன்கொடை! சூர்ய குமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.