குக் வித் கோமாளி -6 வெற்றியாளர் ராஜூ ஜெயமோகன்!
குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளராக ராஜூ ஜெயமோகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளராக ராஜூ ஜெயமோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வெற்றிக் கோப்பையுடன் ரூ. 5 லட்சத்துக்கான பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
ஷபானா, உமர் லத்தீப், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரும் இறுதிப் போட்டியில் பங்கேற்றிருந்த நிலையில், ஷபனா இரண்டாவது இடத்தை தட்டிச் சென்றுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி -6 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. வார இறுதி நாள்களில் ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் சமையல் போட்டியில் பங்கேற்று தங்கள் திறனை வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர் வெளியேற்றப்படும் நிலையில், இறுதிவரை நீடித்து இருப்பவர் இந்த சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
Advertisement
Advertisement
வெறும் சமையல் நிகழ்ச்சியாக மட்டுமின்றி மக்கள் மனங்களைக் கவரும் வகையிலான சிரிப்பு நிகழ்ச்சியாகவும் குக் வித் கோமாளி இருப்பதால், தொடர்ந்து 6வது சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒவ்வொரு சமையல் போட்டியாளரும் தங்களுக்கான கோமாளியை தேர்வு செய்துகொண்டு, நிகழ்ச்சியின் விதிகளைப் பின்பற்றி, இடையிடையே கொடுக்கப்படும் இடையூறுகளைத் தாண்டி, சமையல் செய்து முடித்திருக்க வேண்டும். இதனை மிகவும் நகைச்சுவை பொழுதுபோக்கு அம்சங்களுடன் செய்து முடிப்பதால், இந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் அதிகம் என்றே கூறலாம்.
அந்தவகையில் குக் வித் கோமாளி - 6 நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியில் ராஜூ ஜெயமோகன், ஷபானா, உமர் லத்தீப், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும், மிகுந்த உணர்வுப்பூர்வமாகவும் நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில், தனது சமையல் திறனால் ராஜூ ஜெயமோகன் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக நடிகை ஷபானா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இதையும் படிக்க | ஹிந்தியில் ரீமேக்காகும் செல்லம்மா தொடர்!
Vijay tv Cooku With Comali Season 6 concluded as winner shabana runner up
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.