முகப்பு
செய்திகள்

ஆதிக்கம் செலுத்தும் ஆயா சேர்!

ஆயா சேர் பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை நெருங்கியது...

Updated On : 9 ஏப்ரல் 2026, 1:21 pm IST
நடிகர் நானி
பகிர்:

நடிகர் நானி படத்தில் இடம்பெற்ற ஆயா சேர் பாடல் யூடியூபில் 10 கோடி பார்வைகளை நெருங்கியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நானி நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “தி பாரடைஸ்”. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கும் இப்படம் மிகப் பெரியளவில் பிரம்மாண்டமாக உருவாகிறது.

இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடலான ’ஆயா சேர்’ அபாரமான வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக, இன்ஸ்டாகிராமில் இப்பாடலின் நடன அசைவுகளை மறு உருவாக்கம் செய்து பலரும் ரீல்ஸ் செய்தனர்.

Advertisement

Advertisement

அண்மையில், ஹைதராபாத்தில் அனிருத் நடத்திய இசைக்கச்சேரியில் ஆயா சேர் பாடல் பாடப்பட்டதும் நானி உள்பட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நடனமாடி உற்சாகமடைந்தனர்.

இந்த நிலையில், யூடியூபில் இப்பாடல் 10 கோடி (100 மில்லியன்) பார்வைகளைக் நெருங்கி அசத்தலான வெற்றியைப் பெற்றுள்ளது. இப்பாடலை அதுல்லா ஜாங்கிரெட்டி, அர்ஜுன் சாண்டி பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.