வெளிநாட்டு வாக்காளர்களை ஏன் வந்தாய் என்றா கேட்க முடியும்? வடிவேலு பேச்சு
தேர்தலுக்காக வெளிநாட்டில் இருந்து வந்து வாக்களிப்பவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என நடிகர் வடிவேலு கருத்து...
தேர்தலுக்காக வெளிநாட்டில் இருந்து வந்து வாக்களிப்பவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.
அந்தவகையில் சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் வடிவேலு வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
Advertisement
சிரமம் பார்க்காமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும். நம் நாட்டிற்கு நீங்கள் அளிக்கும் வாக்குகள் நன்மை பயக்கும்.
சின்னத்தைப் பார்த்து வாக்களிக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்து வாக்களிக்கிறார்கள் என்றால் அது நல்லதுதான். வந்து வாக்களித்துவிட்டு போகட்டும்.
வெளிநாட்டில் இருந்து வாக்களிக்க வருபவர்கள் பாராட்டுக்குரியவர்கள். அவர்களை ஏன் வந்தீர்கள் என்றா கேட்க முடியும்?
தேர்தல் ஆணையம் தெளிவாக உள்ளது. அது குறித்து குறை கூறினால் நம் மீது வழக்கு போட்டுவிடுவார்கள் எனக் கேலியாகப் பேசினார்.