அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!
அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகின்றது. அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் காலைமுதல் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்.
Advertisement
Advertisement
அவருடன் அவரது மகளும் இயக்குநருமான செளந்தர்யாவும் வாக்குப்பதிவு செய்தார்.
வாக்களித்துவிட்டு வெளியே வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், வாக்குரிமை உள்ள வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
Everyone should vote Rajinikanth's appeal after voting!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.