வித் லவ் திரைகள் அதிகரிப்பு!
கூடுதல் திரைகளில் வித் லவ்...
வித் லவ் திரைப்படத்திற்குக் கூடுதலாகத் திரைகள் அதிகரித்துள்ளன.
அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் நடிகர்கள் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான வித் லவ் திரைப்படம் பிப். 6 அன்று வெளியானது.
பள்ளிகால கதையுடன் கூடிய நகைச்சுவை காதல் படமாக உருவான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் இளம் தலைமுறை ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனால், இப்படம் முதல் நாள் வசூலாக ரூ. 2 கோடி வரை வசூலித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டூரிஸ்ட் பேமிலி மூலம் இயக்குநராக கவனிக்கப்பட்ட அபிஷன் கதாநாயகனாகவும் கவனம் ஈர்த்து வருவது ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்திற்கான திரைகள் அதிகரித்து தற்போது தமிழகத்தில் 350 திரைகளில் திரையிடப்பட்டுள்ளதாம்.