வித் லவ் வசூல் இவ்வளவா..?
வித் லவ் திரைப்படத்தின் வசூல் விவரம் பற்றி...
வித் லவ் திரைப்படத்தின் 10 நாள்கள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் நடிகர்கள் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான வித் லவ் திரைப்படம் பிப். 6 அன்று வெளியானது.
பள்ளிகால கதையுடன் கூடிய நகைச்சுவை காதல் படமாக உருவான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் இளம் தலைமுறை ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது.
Advertisement
Advertisement
முதல் நாளிலேயே ரூ. 2 கோடிக்கு மேல் வசூலித்தது. ரசிகர்களிடையே வரவேற்பு எழுந்த நிலையில், பின்னர் திரையரங்குகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில், முதல் 10 நாள்களில் ரூ. 25 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
டூரிஸ்ட் பேமிலி மூலம் இயக்குநராக கவனிக்கப்பட்ட அபிஷன், கதாநாயகனாகவும் கவனம் ஈர்த்து, வசூல் ரீதியிலும் வெற்றிப் படத்தை கொடுத்துள்ளது ஆச்சரியப்படுத்தியுள்ளது.
With Love movie 10 days box office collection
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.