ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
நடிகர் சிரஞ்சீவி மற்றும் நடிகை நயன்தாரா நடித்துள்ள மன ஷங்கர வரபிரசாத காரு திரைப்படம் ஜீ5 தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 7 மொழிகளில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். ஷைனி ஸ்கீரின்ஸ் அன்ட் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
இதில், நாயகியாக பிரார்த்தனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் தம்பி ராமையா, இளவரசு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
நடிகர் நிவின் பாலி - இயக்குநர் அருண் வர்மா கூட்டணியில் உருவான “பேபி கேர்ள்” திரைப்படத்தை சோனி ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
இந்தத் திரைப்படம் கடந்த ஜன. 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
நவீன் பொலிஷெட்டி, மீனாட்சி சௌத்ரி நடிப்பில் தெலுங்கில் மொழியில் வெளியான படம் அனகனக ஒக்க ராஜு.
நகைச்சுவை கலந்து குடும்ப பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தற்போது காணக் கிடைக்கிறது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
மைக்கேல் சாவ்ஸ் இயக்கத்தில் திகில் பாணியில் எடுக்கப்பட்டு கடந்தாண்டு வெளியான திரைப்படம் தி கன்ஜூரிங்: லாஸ்ட் ரைட்ஸ்.
இந்தப் படம் தி கன்ஜூரிங் திரைப்படத் தொடரின் ஒன்பதாவது பாகமாகும். இந்தப் படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நாளை (பிப்.13) வெளியாகிறது.
பீபுள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார், சஞ்சய் தத் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தி ராஜா சாப்.
இந்தத் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் காணக் கிடைக்கிறது.
சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான பராசக்தி திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியானது. மேலும், இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பராசக்தி திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளுடன் தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் காணலாம்.
காதல் கலந்த நகைச்சுவை பாணியில் வெளியான திரைப்படம் நாரி நாரி நடும முராரி. இப்படத்தில் ஷர்வானந்த், சாக்ஷி வைத்யா, சம்யுக்தா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அமேசான் பிரைம் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படத்தை காணலாம்.
நாயகனாக மகேந்திரனும், வில்லனாக ராம்கியும் நடித்துள்ள தெலுங்கு மொழிப்படம் நீலகண்டா.
கிராமப்புறப் பின்னணியில் உருவான திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.
இயக்குநர் வ. கௌதமன் எழுத்து, இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'படையாண்ட மாவீரா'.
சமுத்திரக்கனி, பூஜிதா, 'பாகுபலி' பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், 'ஆடுகளம்' நரேன், மன்சூர் அலிகான், இளவரசு, கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.