முகப்பு
செய்திகள்

10 தலைமுறை ஆச்சு... சுவாரஸ்யமான தாய் கிழவி புரோமோ!

தாய் கிழவி புரோமோ...

Updated On : 14 பிப்ரவரி 2026, 6:03 pm IST
பகிர்:

தாய் கிழவி திரைப்படத்தின் புரோமோ கவனத்தை ஈர்த்துள்ளது.

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள “தாய் கிழவி” திரைப்படம் பிப். 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படத்தில் வட்டிக்கு விடும் பவுன் தாய் கதாபாத்திரத்தில் ராதிகா நடித்திருந்த டீசர் வெளியாகி பலரிடமும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

Advertisement

Advertisement

இப்படத்தின் முதல் பாடலனா ‘தாய் கிழவி வாரா’ பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், காதலர் நாளை முன்னிட்டு இப்படத்தின் புரோமோவை வெளியிட்டுள்ளனர்.

இதில், பள்ளி செல்லும் மாணவனும் மாணவியும் காதலிக்கும்போது, மாணவியின் தலையில் அடித்தபடி ”பத்து தலைமுறை ஆச்சு பள்ளிக்கூடம் போகறது” என ராதிகா வசனம் பேசுவது கவனத்தை ஈர்த்ததுடன் பலரிடமும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.