முகப்பு
செய்திகள்

அதிகரிக்கும் ஆன்மீகப் பின்னணி திரைப்படங்கள்!

ஆன்மீகப் பின்னணியில் உருவாகும் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள்...

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 10:41 AM
பகிர்:

ஆன்மீகப் பின்னணியில் உருவாகும் திரைப்படங்கள் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்டோர் ஆன்மீகப் பின்னணி கதையில் நடிக்கின்றனர். இதில், சூர்யாவின் கருப்பு, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் - 2, சிவகார்த்திகேயனின் சேயோன் ஆகியவை இந்தாண்டே திரைக்கு வருகின்றன.

சுவாரஸ்யமாக தமிழ் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்த்தில் உள்ள நடிகர்கள் ஆன்மீகப் பின்னணியில் ஆக்சன் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

Advertisement

கருப்பு டீசரில் சூர்யா கடவுள் நம்பிக்கை கொண்ட தோற்றத்தில் உள்ளார். சிவகார்த்திகேயன் சேயோன் புரோமோவில் விருமாண்டி தெய்வத்தின் சாமியாடியாக வருகிறார். மூக்குத்தி அம்மனில் நயன்தாரா அம்மனாக நடிக்கிறார்.

அண்மை காலமாக, ஆன்மீக நம்பிக்கை பின்னணியில் கதைகள் அதிகரித்து வருவதுடன் வணிக ரீதியாகவும் இக்கதைகளின் தாக்கம் நகரங்கள், கிராமங்கள் வரை செல்லும் என்பதால் அவற்றின் மீது எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments