ஜன நாயகன் டிரைலர் வெளியீடு அறிவிப்பு!
"ஜன நாயகன்" திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...
நடிகர் விஜய்யின் “ஜன நாயகன்” திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள “ஜன நாயகன்” திரைப்படம் வரும் ஜன.9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில், நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இத்துடன், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் அவரது கடைசி படம் எனக் கூறப்படும் ”ஜன நாயகனின்” வெளியீட்டிற்காக அவரது ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், “ஜன நாயகன்” திரைப்படத்தின் டிரைலர் வரும் ஜன.3 ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக, இப்படத்தின் டிரைலர் நாளை (ஜன. 2) வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The release date for the trailer of actor Vijay's film "Jana Nayagan" has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.