ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
தின்ஜித் அய்யதன் இயக்கத்தில் நடிகர் சந்தீப் ப்ரதீப் நடிப்பில் வெளியான மலையாள மொழித்திரைப்படம் எகோ. இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மலையாள மொழியில் மட்டும் காணக் கிடைக்கிறது.
மலைத்தொடர்களால் சூழப்பட்ட ஒரு பகுதியில் காவல்துறையிடமிருந்து தப்பித்த குரியாச்சன் என்பவரைக் கண்டுபிடிக்கும் கதையில் சில சுவாரஸ்யமான திருப்பங்களும், திரில்லர் அம்சங்களும் இப்படத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
நடிகர் விக்ராந்த் நடித்துள்ள 'எல்பிடபுள்யூ- லவ் பியாண்ட் விக்கெட்' என்ற இணையத் தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்தத் தொடரை அருணா ராக்கி எழுதி, கணேஷ் கார்த்திகேயன் இயக்கியுள்ளார். ‘ஹார்ட்பீட்’ தொடரை தயாரித்த அட்லீ பேக்டரி நிறுவனம் இந்தத் தொடரை தயாரித்துள்ளது.
உலகளவில் அதிக ரசிகர்கள் கொண்ட இணையத் தொடரான ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடரின் 5வது சீசனின் 2 வால்யூம் கடந்த வாரம் வெளியான நிலையில், கடைசி எபிசோட் நாளை(ஜன. 2) வெளியாகிறது.
இந்தத் தொடரை ஆங்கிலம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.
பிரிட்டிஷ் திரில்லர் இணையத் தொடர். ரன் அவே. இந்தத் தொடரில் ஜேம்ஸ் நெஸ்பிட், எல்லி டி லாங், ரூத் ஜோன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ரன் அவே இணையத் தொடரை நெட்ஃபிளிக்ஸ் ஒடிடியில் காணலாம்.
பிரசாந்த் விஜய் இயக்கத்தில் வெளியான மலையாளத் திரைப்படமான 'இத்திரி நேரம்' படத்தில் ரோஷன் மேத்யூ, ஸரீன் ஷிஹாப் நடித்துள்ளனர்.
இந்தப் படம் சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஆக்ஷன் மற்றும் அட்வென்ச்சர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் மோக்லி. இந்தப் படத்தை சந்தீப் ராஜ் இயக்கியுள்ளார்.
ரோஷன் கனகலா, சாக்ஷி மதோல்கர் நடித்துள்ள இந்தப் படத்தை ஈடிவி வின் தளத்தில் காணலாம்.
தெலுங்கு மொழிப்படமான ஆந்திரா கிங் தாலுகா, நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
நடிகர்கள் ராம் போதினேனி, உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை மகேஷ் பாபு இயக்கியுள்ளார்.
ரஜினி கிஷன் தயாரிப்பில், எம். ரமேஷ் பாரதி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ரஜினி கேங். ஹாரர் காமெடி திரைப்படமாக வெளியான இந்தப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், முனிஷ் காந்த், திவிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படத்தை, ஜேகே. சந்துரு எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
நடிகர் முனிஷ்காந்த் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் மிடில் கிளாஸ். இப்படத்தில், இவருக்கு மனைவியாக நடிகை விஜயலட்சுமி நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ளார்.
இந்தத் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.