நடிகர்கள் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 173 ஆவது திரைப்படம் உருவாகிறது என அறிவிப்பு வெளியானது முதல் இருவரது ரசிகர்களும் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
இந்தப் படத்தை, மூத்த இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக அறிவிப்பு வெளியான சில நாள்களில் அவர் இப்படத்தில் இருந்து விலகினார்.
இந்த நிலையில், கமல்ஹாசன் தயாரிக்கும் ரஜினிகாந்தின் 173 ஆவது திரைப்படத்தின் இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் நாளை (ஜன. 3) காலை 11 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படும் நிலையில், இப்படத்தின் இயக்குநர் யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.