செய்திகள்

183 நாள்களுடன் முடிவடைந்த பூங்காற்று திரும்புமா தொடர்!

பூங்காற்று திரும்புமா தொடர் முடிவடைந்தது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பூங்காற்று திரும்புமா தொடர் கடந்த ஜன. 3 ஆம் தேதி 183 எபிசோடுகளுடன் முடிவடைந்தது.

பூங்காற்று திரும்புமா தொடரில் மோதலும் காதலும் தொடர் நாயகன் சமீர் மற்றும் முத்தழகு தொடர் நாயகி ஷோபனா ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்து வந்தனர்.

இந்தத் தொடர் கடந்த ஏப். 28 ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், குறுகிய காலத்தில் 7 மாதங்களில் முடிவடைந்தது.

பூங்காற்று திரும்புமா தொடரின் பரபரப்பான இறுதிக்கட்ட காட்சிகள் ஜனவரி 3 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு நிறைவு பெற்றது.

கலைஞர் தொலைக்காட்சியில் எஸ். வி. சேகர் உடன் நடிகை ஷோபனா நடித்த மீனாட்சி சுந்தரம் தொடர் குறுகிய காலத்தில் நிறைவடைந்த நிலையில், அவரின் பூங்காற்று திரும்புமா தொடரும் முடிவடைந்ததால், நடிகை ஷோபனா ரசிகர்களுக்கு சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூங்காற்று திரும்புமா தொடருக்குப் பதிலாக, சுற்றும் விழி சுடரே தொடர் இன்று(ஜன. 5) முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கும் இந்தத் தொடரில் பிரதான பாத்திரத்தில் வினுஷா தேவி, யுவன் மயில்சாமி ஆகியோர் நடிக்கின்றனர். வினுஷா தேவியின் மகளாக பேபி தன்ஷிகா குழந்தை நட்சத்திரமாக நடிக்கிறார்.

The series 'Poongatru Thirumbuma', which was being aired on Vijay TV, concluded on January 3rd with 183 episodes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுக்கு சிக்கல்! ரஷிய எண்ணெய் வாங்கினால் 500% வரி! மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல்

சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை! ஜன நாயகனுக்கு காங்கிரஸ் ஆதரவு!

வெனிசுவேலா இனி அமெரிக்க பொருள்களை மட்டுமே வாங்கும்! டிரம்ப் அறிவிப்பு

கோவையில் ஜாமீனில் வெளிவந்தவர் கொடூரமாக அடித்துக் கொலை!

வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் மகன் விபத்தில் பலி!

SCROLL FOR NEXT