தலைவர் தம்பி தலைமையில் வெளியீட்டுத் தேதி!
தலைவர் தம்பி தலைமையில் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி...
செய்திகள்தலைவர் தம்பி தலைமையில் வெளியீட்டுத் தேதி!
தலைவர் தம்பி தலைமையில் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி...
நடிகர் ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜீவா தன் 45-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் நிதிஷ் சஹதேவ் இயக்கிய இப்படத்திற்கு, ‘தலைவர் தம்பி தலைமையில்’ எனப் பெயரிட்டுள்ளனர். இதன் முதல் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது.
இதில், நாயகியாக பிரார்தனாவும் தம்பி ராமையா, இளவரசு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசரில், கரூர் பலியின் போது அமைச்சர் அன்பில் மகேஷ், ‘படிச்சு படிச்சு சொன்னேனே, கண்டிஷன்ஸை பாலோ பண்ணுங்கன்னு’ என பேசிய விடியோ வைரலானது.
இந்த நிலையில், இப்படம் வருகிற ஜன. 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.