செய்திகள்

தலைவர் தம்பி தலைமையில் வசூல் இவ்வளவா?

தலைவர் தம்பி தலைமையில் வசூல் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜீவா நடிப்பில் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்த திரைப்படமான தலைவர் தம்பி தலைமையில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிப்படமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தோல்விப்படங்களால் மார்க்கெட் இழந்து நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்த ஜீவாவுக்கு திருப்புமுனை படமாகவே இது அமைந்துள்ளதாக அவரின் ரசிகர்கள் கருதுகின்றனர்.

அதேநேரம், படத்தில் இடம்பெற்ற, ‘கண்டிஷன்ஸை பாலோ பண்ணுங்கடா’ என்கிற வசனத்தை புரமோஷனுக்காக திரையரங்கம் ஒன்றில் ஜீவா பேசியது சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் ரூ. 18 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம், மலையாளத்தில் ஃபலிமி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான நிதிஷ் சகதேவ் தமிழ் படத்திலும் வென்றிருக்கிறார்.

thalaivar thambi thalamayil movie collected more than rs.18 crores

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழகம் வெல்லட்டும்’ பெயரில் திருச்சியில் திமுக மாநில மாநாடு!

மகளிர் பிரீமியர் லீக்: மும்பைக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

திமுக மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்!

ஐசிசியின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம்; டி20 உலகக் கோப்பை விவகாரத்தில் வங்கதேசம் பிடிவாதம்!

3வது காலாண்டு வருவாய் தொடர்ந்து டெக் மஹிந்திரா பங்குகள் உயர்வு!

SCROLL FOR NEXT