தலைவர் தம்பி தலைமையில் படத்துக்கான அமோக வரவேற்பினால் நடிகர் ஜீவா தனது எக்ஸ் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் நன்றி தெரிவித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.
பொங்கல் வெற்றியாளர்
ஜீவாவின் 45-ஆவது படமாக உருவான, ‘தலைவர் தம்பி தலைமையில்’ ப்டத்தினை இயக்குநர் நிதிஷ் சஹதேவ் இயக்கியுள்ளார்.
இதில், நாயகியாக பிரார்தனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் தம்பி ராமையா, இளவரசு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்தப் படம் பொங்கல் வெளியீடாக நேற்று (ஜன.15) வெளியானது. இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
சமூக வலைதளங்களில் பொங்கல் வெற்றி ஜீவாவுக்குத்தான் என தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நன்றி
இந்நிலையில், இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
தலைவர் தம்பி தலைமையில் படத்துக்கு அளிக்கும் வரவேற்புக்கு மிகுந்த நன்றி மக்களே. ஒவ்வொரு குறுஞ்செய்தியும் ஒவ்வொரு பாராட்டும் என்னை ஆழத்தில் தொடுகிறது.
என்னைப் பற்றின மீம்ஸுகளுக்கும் நன்றி. அனைத்து எடிட்டிற்கும் கூடுதலான அன்புகள். அவர்கள் அன்புடன் ஆதரவு தந்து இந்தப் பயணத்தைக் கூடுதல் சிறப்பானதாக மாற்றிவிட்டார்கள்.
படம் பார்க்கும், பார்க்கப்போகும் அனைத்து கண்களுக்கும் என் நன்றிகள். கண்டிஷன்ஸைப் ஃபாலோவ் செய்து மகிழ்ந்திருங்கள். திரையரங்கில் மட்டும்! எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.