செய்திகள்

ஹிந்தியில் ரீமேக்காகும் தலைவர் தம்பி தலைமையில்!

தலைவர் தம்பி தலைமையில் ரீமேக் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளது.

நடிகர் ஜீவா நடிப்பில் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்த திரைப்படமான தலைவர் தம்பி தலைமையில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாக மாறியுள்ளது.

தோல்விப்படங்களால் மார்க்கெட் இழந்து நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்த ஜீவாவுக்கு திருப்புமுனை படமாகவே இது அமைந்துள்ளதாக அவரின் ரசிகர்கள் கருதுகின்றனர்.

அதேநேரம், படத்தில் இடம்பெற்ற, ‘கண்டிஷன்ஸை பாலோ பண்ணுங்கடா’ என்கிற வசனத்தை புரமோஷனுக்காக திரையரங்கம் ஒன்றில் ஜீவா பேசியது சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாகத் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தெரிவித்துள்ளார். பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்போதே இதன் ஹிந்தி ரீமேக் உரிமம் பெறப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணிகளால் 126 போ் பலி! -திரிணமூல் காங். குற்றச்சாட்டு

ஜோ ரூட் அரைசதம்; இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

பாகிஸ்தானில் திருமண நிகழ்வில் தற்கொலைப் படைத் தாக்குதல்: 7 பேர் பலி

ஈரானிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள்: அரசு உதவ கோரிக்கை!

சத்தீஸ்கரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை: வெடிபொருட்கள், ஜெலட்டின் குச்சிகள் மீட்பு

SCROLL FOR NEXT