ஓடிடியில் வெளியானது தலைவர் தம்பி தலைமையில்!
ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...
தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஜீவாவின் 45-ஆவது படமாக உருவான, ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தினை இயக்குநர் நிதிஷ் சஹதேவ் இயக்கியுள்ளார்.
இதில், நாயகியாக பிரார்த்தனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் தம்பி ராமையா, இளவரசு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்த திரைப்படமான தலைவர் தம்பி தலைமையில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று ரூ. 25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
மேலும், இப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாகத் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் இன்று(பிப். 12) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
Thalaivar Thambi, Thalaimail film's OTT platform is being released and is attracting the attention of fans.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.