செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வார ஓடிடி வெளியீடு தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

அங்கம்மாள்

இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'கோடித்துணி' என்கிற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 'அங்கம்மாள்'.

மறைந்த பிரபல இயக்குநரான கே. பாலச்சந்தரின் மருமகளான நடிகை கீதா கைலாசம் இப்படத்தில் அங்கம்மாளாக நடித்திருக்கிறார். இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை (ஜன. 9) வெளியாகிறது.

அகாண்டா 2

நடிகர் பாலகிருஷ்ணா - இயக்குநர் போயபடி ஸ்ரீனு கூட்டணியில் உருவான அகாண்டா 2: தாண்டவம் திரைப்படம் டிச.12 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நாளை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாள, கன்னட மொழிகளில் வெளியாகிற்து

மாஸ்க்

நடிகர் கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவான மாஸ்க் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விக்ரணன் அசோக் இயக்கியிருந்தார்.

நடுத்தர குடும்பத்தினர்களின் வலிகளைச் சொன்ன படமாக உருவானாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இப்படம் ஜீ5 ஓடிடியில் நாளை வெளியாகிறது.

பல்டி

பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம் நாயகனாக நடித்துள்ள பல்டி படம், அமேசான் பிரைம் ஓடிடியில் நாளை வெளியாகிறது.

இப்படத்தில், குமார் என்கிற பிரதான பாத்திரத்தில் கபடி வீரராக நடிகர் சாந்தனு நடித்துள்ளார். கேங்ஸ்டர் கதாபாத்திரங்களில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

யெல்லோ

பிக் பாஸ் பிரபலம் பூர்ணிமா ரவி பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'யெல்லோ'.

காதல் கலந்த நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

கடந்த வார ஓடிடி (மோக்லி)

ஆக்‌ஷன் மற்றும் அட்வென்ச்சர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் மோக்லி. இந்தப் படத்தை சந்தீப் ராஜ் இயக்கியுள்ளார்.

ரோஷன் கனகலா, சாக்‌ஷி மதோல்கர் நடித்துள்ள இந்தப் படத்தை ஈடிவி வின் தளத்தில் காணலாம்.

இத்திரி நேரம்

பிரசாந்த் விஜய் இயக்கத்தில் வெளியான மலையாளத் திரைப்படமான 'இத்திரி நேரம்' படத்தில் ரோஷன் மேத்யூ, ஸரீன் ஷிஹாப் நடித்துள்ளனர்.

இந்தப் படம் சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ரன் அவே

பிரிட்டிஷ் திரில்லர் இணையத் தொடர் ரன் அவே. இந்தத் தொடரில் ஜேம்ஸ் நெஸ்பிட், எல்லி டி லாங், ரூத் ஜோன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ரன் அவே இணையத் தொடரை நெட்ஃபிளிக்ஸ் ஒடிடியில் காணலாம்.

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்

உலகளவில் அதிக ரசிகர்கள் கொண்ட இணையத் தொடரான ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடரின் 5வது சீசனின் 2வது பகுதியின் கடைசி எபிசோட் கடந்த வாரம் வெளியானது.

இந்தத் தொடரை ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

எல்பிடபுள்யூ- லவ் பியாண்ட் விக்கெட்

நடிகர் விக்ராந்த் நடித்துள்ள 'எல்பிடபுள்யூ- லவ் பியாண்ட் விக்கெட்' என்ற இணையத் தொடரை, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணலாம்.

இந்தத் தொடரை அருணா ராக்கி எழுதி, கணேஷ் கார்த்திகேயன் இயக்கியுள்ளார். ‘ஹார்ட்பீட்’ தொடரை தயாரித்த அட்லீ பேக்டரி நிறுவனம் இந்தத் தொடரை தயாரித்துள்ளது.

எகோ

தின்ஜித் அய்யதன் இயக்கத்தில் நடிகர் சந்தீப் ப்ரதீப் நடிப்பில் வெளியான மலையாள மொழித்திரைப்படம் எகோ. இப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பார்க்கலாம்.

மலைத்தொடர்களால் சூழப்பட்ட ஒரு பகுதியில் காவல்துறையிடமிருந்து தப்பித்த குரியாச்சன் என்பவரைக் கண்டுபிடிக்கும் கதையில் சில சுவாரஸ்யமான திருப்பங்களும், திரில்லர் அம்சங்களும் இப்படத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

Let's see which films and web series are releasing on OTT platforms this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

செங்கம் சிவன் கோயிலில் ஜன.28-இல் கும்பாபிஷேகம்: ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு

குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் ஆய்வுக் கூட்டம்

வேலூா் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் திருக்கு கருத்தரங்கம்

சிப்காட் வளாகத்தில் தூய்மைப் பணி: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT