பராசக்தி திரைப்படத்தில் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் நீக்கிய அறிஞர் அண்ணா துரையின் காட்சி புரோமோவாக வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சுதா கொங்கரா கூட்டணியில் உருவான “பராசக்தி” திரைப்படம் நாளை (ஜன. 10) திரையரங்குகளில் வெளியாகின்றது.
1964 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் அப்போதைய அரசு போராட்டக்காரர்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கைகளை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
நடிகர்கள் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோரின் நடிப்பில் உருவான இப்படத்தில் பல காட்சிகள் மற்றும் வசனங்களை தணிக்கை வாரியம் நீக்கியுள்ளது.
அறிஞர் அண்ணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க “அச்சம் இருக்கும் வரையில் இங்கு யார் ஆண்டாலும் அண்ணா துரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்” எனும் உரை பராசக்தி படத்தில் வசனமாக இடம்பெற்றிருந்த நிலையில் அதைத் தணிக்கை வாரியம் நீக்கியது பெரும் பேசுப் பொருளாகியுள்ளது.
இந்த நிலையில், அறிஞர் அண்ணாவின் நீக்கப்பட்ட வசனத்துடன் கூடிய புரோமோ விடியோவை பராசக்தி படக்குழுவினர் இன்று (ஜன. 9) வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக, இப்படத்தில் பிரபல நடிகர் சேத்தன் மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா துரையின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.