ஓ சுகுமாரி படத்தின் போஸ்டர்.  படம்: இன்ஸ்டா / ஐஸ்வர்யா ராஜேஷ்.
செய்திகள்

ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாளில் ஓ சுகுமாரி பட போஸ்டர்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படத்தின் போஸ்டர் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ஓ சுகுமாரி படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

பிறந்த நாளன்று வெளியாகியுள்ள இந்தப் போஸ்டரில் இந்தப் படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளதைப் படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை, ரம்மி, கனா, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தார்.

அவரது ‘டிரைவர் ஜமுனா’, ஃபர்ஹானா, புலிமடா, தீராக் காதல் ஆகிய திரைப்படங்கள் அவருக்கென தனியான ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்தன.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கில் இவர் நடித்துள்ள ஓ சுகுமாரி எனும் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஓ சுகுமாரி எனும் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய 6 மொழி போஸ்டர்களிலும் வெளியாகியுள்ளது.

பரத் தர்ஷன் இயக்கியுள்ள இந்தப் படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ளது.

கடைசியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான தீயவர் குலை நடுங்க திரைப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளிலும் இவர் அசத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

The first look poster of actress Aishwarya Rajesh's film 'O Sukumari' has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் என்றுமே கூட்டணி ஆட்சி இல்லை: அமைச்சர் ஐ. பெரியசாமி

மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மீது தாக்குதல்: பாஜவினர் பல்வேறு இடங்களில் போராட்டம்

பாஜக ஆட்சியில் மட்டுமே வளர்ச்சி சாத்தியம்: அமித் ஷா

தமிழ் அடையாளத்திற்கு முன்பு வேறு எந்த அடையாளமும் நிற்க முடியாது: துணை முதல்வர் உதயநிதி

சோம்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

SCROLL FOR NEXT