நடிகை ரஜிஷா விஜயனின் கவர்ச்சிப் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், மலையாள சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வுசெய்து நடித்து தனக்கென ரசிகர்களை வைத்திருப்பவர் நடிகை ரஜிஷா விஜயன்.
தமிழில், கர்ணன், ஜெய்பீம், பைசன் ஆகிய திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் தற்போது கதாநாயகியாக சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், மலையாளத்தில் உருவாகி வரும் ’மஸ்திஷ்கா மரணம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’கோமல தாமரை’ என்கிற கவர்ச்சிப்பாடலில் கிளாமராக உடை அணிந்து நடனமாடி ரஜிஷா ரசிகர்களிடம் வைரலாகியுள்ளார்.
இதுவரை குடும்பப் பெண் தோற்றத்திலேயே பார்த்துவந்த நிலையில், முதல்முறையாக கவர்ச்சியில் இறங்கியுள்ள ரஜிஷாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டும் வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.