வா வாத்தியார் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடிகர் கார்த்தி எம்ஜிஆர் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான வா வாத்தியார் திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். கடந்தாண்டே வெளியாக வேண்டிய படம் தயாரிப்பாளர் சந்தித்த நிதி வழக்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது, பொங்கல் வெளியீடாக வருகிற ஜன. 14 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வா வாத்தியார் வெளியீட்டை முன்னிட்டு நடிகர் கார்த்தி உள்பட படக்குழுவினர் மறைந்த தமிழக முதல்வரும் நடிகருமான எம்ஜிஆர் நினைவிடம் சென்று அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து தங்களின் மரியாதையைச் செலுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.