தவெக கொள்கைத் தலைவர்களுக்கு விஜய் மரியாதை
தவெகவின் 3ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பனையூரில் கட்சியின் கொள்கைத் தலைவர்களுக்கு மலர் தூவி விஜய் மரியாதை செலுத்தினார்.
தவெகவின் 3ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பனையூரில் கட்சியின் கொள்கைத் தலைவர்களுக்கு மலர் தூவி அக்கட்சித் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
அஞ்சலையம்மாள், வேலுநாச்சியார், அம்பேத்கர், பெரியார், காமராஜர் சிலைகளுக்கு அவர் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சிக் கொடியையும் அவர் ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது.
பேரவைத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் தொகுதி வாரியான பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாகக் கட்சியினர் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
முன்னதாக தவெகவின் 3 ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், 2026 சட்டமன்றத் தேர்தல் களம், இதுவரை இல்லாத புதிய சூழலைச் சுமந்து நிற்கிறது. ஆட்சிபீடத்தை கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம் என்று தெரிவித்துள்ளார்.
On the occasion of the 3rd anniversary celebrations of TVK, Vijay paid floral tributes to the party’s ideological leaders in Panaiyur.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.