தவெக தலைவர் விஜய்யின் வெற்றிக்காக சாத்தியமான எல்லா இடங்களில் பிரார்த்தனை செய்திருக்கிறேன் என்று நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.
தில்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட பொங்கல் விழாவில் பராசக்தி திரைப்படக் குழுவினர் இன்று கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வு நிறைவடைந்த பிறகு தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன் பேசியதாவது:
”தில்லியின் மையப் பகுதியில் பொங்கல் விழா நடைபெறுவது அனைத்து தமிழ் மக்களுக்கும் ஒரு கெளரவம். இந்த நிகழ்வுக்கு என்னை அழைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் பிரதமரைச் சந்தித்தேன், அவரின் ஆளுமை மிகவும் பிரம்மாண்டமானது. புன்னகை முகத்துடன் எங்களை வரவேற்றார்.
மக்கள் தாங்கள் விரும்புவதை எல்லாம் சொல்வார்கள், ஆனால் சினிமாவை பொறுத்தவரை அது ஒரு பொழுதுபோக்கு துறை, அதனை அதன்போக்கில் விட்டுவிடுவோம். அரசியலை அதிலிருந்து விலக்கி விடுங்கள். மக்கள் தாங்கள் சந்திக்கும் மன அழுத்தத்தை போக்க பொழுதுபோக்கை விரும்புகிறார்கள். திரைப்படங்களை பொழுதுபோக்கு மனப்பான்மையுடன் பார்க்க வேண்டும். அதில் நல்லது இருந்தால் எடுத்துக் கொள்ளலாம், இல்லையெனில் விட்டுவிடலாம்.
நான் விஜய்யின் ரசிகனாக, சாத்தியமான அனைத்து இடங்களிலும் அவரின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்திருக்கிறேன். ஒவ்வொரு கட்டத்திலும் நான் அவருடைய தீவிர ரசிகன் என்பதை நிரூபித்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.