'போர் தொழில்' இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 54-வது படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் வரை சென்ற நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்தாண்டில் மட்டும் மூன்று படங்கள் வெளியாகியிருந்தன.
தெலுங்கில் குபேரா, அடுத்ததாக தமிழில் தன்னுடைய இயக்கத்தில் இட்லி கடை, ஹிந்தியில் தேரே இஷ்க் மெய்ன் என மூன்று படங்களுமே அந்தந்த மொழிகளில் வெற்றிபெற்றன. இதுமட்டுமின்றி, அவரின் இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்கிற திரைப்படமும் வெளியாகி கலவையான விமர்சனங்களை ப் பெற்றது.
அசோக் செல்வன் நடிப்பில் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற போர்த்தொழில் படத்தில் இயக்குநர் விக்னேஷ் ராஜாவுடன் தன்னுடைய 54 வது படத்தில் தனுஷ் ஒப்பந்தமானார்.
விக்னேஷ் ராஜா, தனுஷ் உடன் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், டி54 படத்தின் பர்ஸ்ட் முதல் பார்வை போஸ்டருடன் படத்தின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ‘கர’ என பெயரிடப்பட்டு உள்ளது.
போஸ்டரில், “சில நேரங்களில் ஆபத்தாக இருப்பதே உயிருடன் இருப்பதற்கான ஒரே வழி” என்ற கேப்சனும் இடம்பெற்றுள்ளது. இந்தப் படம் கோடையில் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் ஆண்டுகளில் உள்ள 60 ஆண்டு பெயர்களில் 25 ஆம் ஆண்டு கர என்று அழைக்கப்படுகிறது. அதனடிப்படையில் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.